2019 ஆம் ஆண்டு முடிவுற்றுள்ளது. 2019- 2020 இந்திய தொழிலாளி வர்க்கத்தின் போர்ப்படையாம் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உதயமாகி 50ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது. இந்தியாவில் அகில இந்திய அளவில் அமைப்புரீதியாக தொழிற்சங்கம்(ஏஐடியுசி) உருவாகி நூற்றாண்டை கொண்டாடி வருகிற தருணமும் இதுவே. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தவுடன் ‘அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என நீட்டி முழங்கியது. ஆனால் நாட்டில் தொடரும் பொருளாதார மந்தநிலை, வேலையிழப்புகள், அசுர வேகத்தில் வளரும் வேலையின்மை, அதிகரித்து வரும் வறுமை, வரைமுறை யற்ற தனியார்மயம், தேசத்தின் உற்பத்தி ஆதாரங்கள் தனி யார் வசம், பெருகி வரும் பொருளாதார சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மீது குறிவைத்து தாக்குதல்களை வேகப்படுத்தியது.
♦பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்ற கொள்கைகளால் 2019ம் ஆண்டிலும் சிறு-குறு- நடுத்த ரத்தொழில்கள், பாரம்பரிய தொழில்கள் நெருக்கடிகளிலி ருந்து மீள முடியாமல் நலிவுற்றும், மூடப்பட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். பல சிறுகுறு உடமையாளர்கள் குடும்பத்துடன் தற்காலை செய்து கொண்டனர்.
♦ மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கீழ் நோக்கி செல்வதை மூடிமறைத்து போலியான புள்ளி விவரங்கள் பிம்பங்களை காட்டி மக்களின் கண்ணில் மண்ணை தூவும் வேலையை செய்து கொண்டு ரிசர்வ் வங்கியின் இருப்பி லிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளி களுக்கும் கடன்தள்ளுபடி, வரிகுறைப்பு என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சலுகைகளாக அள்ளி கொடுத்தது
♦ காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்தும், அரசிய லமைப்பு பிரிவு 370ஐ ரத்து செய்தும் மாநில அந்தஸ்தை பறித்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டம், மோட்டார் வாகன சட்ட திருத்தம் என பல சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டது.
♦ குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமகன் பதிவேடு ஆகிய சட்டங்களை மிருகபலத்தைப் பயன்படுத்தி, நாடாளு மன்றத்தில் நிறைவேற்றி அமலாக்க துணிந்தது.
♦ தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்யக்கூடிய வகையில் அவசரகதியில் தொழிலாளர்க ளுக்கு அரணாக இருக்கும் தொழிலாளர் சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்புகளாக வகைப்படுத்தி, தொழிலா ளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சம்பள சட்ட தொகுப்பு, பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு, தொழிலுறவு சட்டத்தொகுப்பு களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
♦கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீரழித்து, அதற்கு தேவையான நிதியை குறைப்பது போன்ற நடவடிக்கையில் மோடி அரசு முனைப்பு காட்டியது.
♦ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று காவல் துறையையும், துணை ராணுவத்தையும் ஏவி, போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்குகிறது. சட்டத்தின் ஆட்சி என்பதிலிருந்து இந்தியாவை இந்துத்துவா ஆட்சிக்கு கொண்டு செல்ல துடிக்கிறது. முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்று ராணுவத்தை தன்வசப்படுத்த முயல்கிறது.
♦அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் தேசவிரோதிகள், தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது என பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
♦தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு மத்திய அரசின் பாதகமான புதிய கல்வி கொள்கை, ஹைட்ரோ கார்பன் திட்டம்,மீத்தேன், எட்டு வழிச்சாலை போன்ற அடுக்க டுக்கான மக்கள் விரோத நடவடிக்கைகளை அமல்படுத்த தீவிரம் காட்டியது.
♦தமிழகத்தை ஆளும் அதிமுக ஆட்சியில் தொழிலாளர் அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் வைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இதனையும் மீறி சங்கம் வைத்தால் தொழிலாளர்கள் பணிநீக்கம், பணியிடைநீக்கம், ஊர்மாற்றம், சம்பளம் பிடித்தம், பணியிடத்தில் பாகுபாடு என பல்வேறு விதமான பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு ஆளாகினர்.
♦ சென்னை மெட்ரோ ரெயில்வே ஊழியர்கள் சங்கம் அமைத்ததை ஏற்கமறுத்த மெட்ரோ நிர்வாகம் சங்க நிர்வாகி களை பழிவாங்கும் நோக்கத்தோடு 7 பேரை வேலைநீக்கம் செய்தது.
♦அஸாஹி நிறுவனத்தில் சங்கம் அமைத்த காரணத்திற் காக 28 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 73 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடை பெற்றது. இது போன்று டாங்சன், ராயல் என்பீல்டு, யமாஹா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களிலும் சங்கத்தை ஏற்க மறுத்து பழிவாங்கல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
♦சேலம் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் சங்கத்தை ஏற்க மறுத்து 99 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்டனர்.
♦ அவாசின், சோவல் போன்று பல தொழில் நிறுவ னங்கள் சட்டவிரோதமாக மூடிவிட்டு ஓடிவிட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலையிழந்துள்ளனர்.
♦ சேலம் ஸ்டீல் தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டங்கள், அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டம், போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், அங்கன்வாடி, அரசு மருத்துவர் என அனைத்து பிரிவினரும் நடத்திய உரிமைக்கான போராட்டங்களை அடக்கவும், ஒடுக்கவுமான நடவடிக்கை களில் அதிமுக முனைப்பு காட்டியது.
♦ மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது மட்டுமல்லாமல், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுவோர் மீது பொய் வழக்குகள் பதிவதும், வீட்டு வாசலில் குடியுரிமை சட்டம் வேண்டாம்என்று கோலமிட்ட பெண்களையும் கூட கைது செய்தும் தனது ராஜவிசுவாசத்தைக் காட்டியது.
♦2019ம் ஆண்டில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள், அரசுப் போக்குவரத்து, மின்சாரம் உட்பட அரசு நிறுவன தொழிலாளர்கள், ஆட்டோ, கட்டுமானம், சுமை உட்பட முறைசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் போராட்ட ஆண்டாக இருந்தது.
2019ம் வருடம் முடிவுக்கு வரும் தருவாயில் நாடு தழுவிய அளவில் 2020 ஜனவரி 8அன்று நடக்க இருக்கும் தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்த போராட்டத்திற் கான ஆயத்த பணிகள் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. தொழிற்சங்க கூட்டங்கள், தொழில்வாரியான கூட்டங்கள், பகுதிவாரியாக நடத்தப்பட்ட கூட்டங்கள் யாவும் அரசின் கொள்கைகளுக்கு எதிரான கூட்டங்களாகும். இந்த அரசின் நாசகர கொள்கைகளின் தாக்கமும் அதற்கான மாற்றுக் கொள்கைகளும் மக்களிடத்தில் பிரச்சாரம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பொது வேலை நிறுத்தம் அரசின் கொள்கையினை மாற்றக் கோருகிறது. மாற்றுக் கொள்கைக்கான பிரச்சாரத்தினை தொழிற்சங்கங்கள் வருங்காலத்தில் தொடர்ந்து நடத்தும். இந்த கால கட்டம் மத்திய பாஜக அரசின் கொள்கையினை அம்பலப்படுத்தி, மாற்றுக் கொள்கையினை மக்களிடம் கொண்டு சென்று கொள்கை மாற்றம் காண வேண்டிய சரியான தருணமாகும். இன்று பிறக்கும் 2020ல் மதவாத பாஜக அரசும், அதற்கு துணை போகும் அதிமுக அரசும் பின்பற்றும் நாசகர பொருளா தார கொள்கைகளை எதிர்த்து சக்திமிக்க போராட்டங்களை தீவிரப்படுத்த மக்களை அணி திரட்டுவோம்.
கட்டுரையாளர் : சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர்